Wednesday, October 04, 2006

காலம் கூட.....

ஏதொ
என்னுடன்- நீ
இருந்த
காலங்களில்
மட்டும்
எனக்கு
துன்பமில்லையடி
ஆனால் இன்று
கனவுகளை
தொலைத்துவிட்டு
கவலையோடு
காத்திருக்கிறேன்
உனக்காக..

நம் காதலின்
கண்கள் மட்டும்
இன்னும்
மூடவில்லயடி..

வருங்காலம்
என்னை
குறை சொல்லுமடி
எனக்கு வலிக்கிறது
இதயம்..

நீ மட்டும்
இல்லையடி
காலமும்
என்னை
எமாற்றிவிட்டது.

Monday, October 02, 2006

ஏலமய்யா ஏலம்!!!!

நம்மூர் திருவிழா இன்னையோடு முடிஞ்சதால கொயில் பந்தல்ல கட்டியிருக்கிற தேங்காய், வாழைத்தார் மற்றும் பரிசு பொருள்கள் நாளைக்கு காலைல 10 மணிக்கு ஏலம் விடப்படும்.. ஏலம் எடுக்கிறவங்க எடுக்கலாம் என்ற தண்டோரா போட்ட காலம் போய் உள்ளாட்சி தலைவர், வார்டு மெம்பர் பதவிகளை ஏலம் விடும் அளவுக்கு நமது நாட்டின் நிலமை கேவலாமாக போய்விட்டது.

எப்படியும் பதவிக்கு வருபவர்கள் நம் கிராமத்திற்க்கு எதுவும் செய்ய போவதில்லை ஆகவே முன்னாடியெ வசுல் செய்துவிடலாம் என்ற எண்ணமா?

உள்ளாட்சிக்கே இப்படி என்றால் நகராட்சி, மாநகராட்சி, வட்டம், மாவட்டம், மாநிலம் என இன்னும் எத்தனையோ பதவிகள் இந்த நாட்டில் இருக்கிற்து. இவைகள் எவ்வளவிற்கு விலை போகும் என்று யாருக்கு தெரியும்.

இப்படி பதவிக்கு வருபவர்கள் போட்ட பணத்தை எடுப்பார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது இந்த மக்களுக்கு எப்படி புரியும்.

ஓசொ ஒரு புத்தகத்தில் சொன்னான் இந்த நாட்டிற்கு அடி முட்டாள்கள் தேவை இல்லையென்றால் யார் மதக்குருமாராக, பாதிரியாராக,தலைவராக ஆக முடியும் என்று.

இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது, P S வீரப்பா சொன்னதா முதல்வன் படத்துல மணிவன்னன் சொல்லுவார் "இந்த் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று
"

Sunday, October 01, 2006

காதல் வலி


இத்தனை
ஆண்டுகளாய்
எழுதி வைத்தேன்
ஒரு கவிதை
உனக்காக- நீ
கடைத்தெருவில்
பூ வாங்கும்போது
ஓரக்கண்ணால்
ஒரு நொடிபார்த்தாயே
என்னுள் ஆயிரம்
பூக்களல்லவா
பூத்தது
ஆனால் அவைகள்
வாடும் முன்பே
என்னை
வாட்டிவிட்டாயே
காதல் வலியால்

Saturday, September 30, 2006

ஏது முடிவு?

பறவையாய்
பிறந்திருக்கலாம்
பாடித்த்றிய
மனிதனாய்
பிறந்துவிட்டு
மனதில்
ஆசைகளை
வளர்த்துவிட்டு
ஏக்கத்தோடு
எழும்-ஒவ்வொரு
நாளும்-முட்களாய்
குத்தியதெ
முடிந்தவரை போராடு
என்றார்கள்
இந்த போராட்டதிற்க்கு
ஏது முடிவு?

முதல் நாள்

இதோ ஒரு கிரமத்த்தானின் முரட்டு சத்தத்தை இன்றிலிருந்து இங்கெ கானலாம்